சுவிட்சர்லாந்தில் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வோட் மற்றும் நியூசெட்டால் ஆகிய கான்டன்களில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத அமைப்புக்களுக்கு பல்வேறு வழிகளில் இந்த நபர்கள் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அல் நுஸ்ரா என்னும் தீவிரவாத அமைப்பிற்கு உதவியதாக இவ்வாறு நான்கு சிரிய பிரஜைகள் கைது செய்பய்பட்டுள்ளனர்.
கைது செய்பய்பட்டவர்கள் 28 வயது முதல் 57 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு தீவிரவாத சந்தேக நபர்கள் ஏதிலி முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்கத்கது.