சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கான தட்டுப்பாடு சமூக மற்றும் அரசியல் பிரச்சினையாக உருவாகும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தின் பொருளியல் அமைச்சர் கய் பர்மலின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டில் தொடர்ச்சியாக வீடுகளுக்கு தட்டுப்பாடு நிலவினால் சமூக மற்றும் அரசியல் ரீதியான பதற்றத்தை அது உருவாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டுக்குள் அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் பிரவேசிப்பதனால் குடியிருப்புக்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக பெரு நகரங்களுக்கு அருகாமையில் குடியிருப்புக்களின் வாடகைத் தொகை வெகுவாக உயர்வடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். வரையறுக்கப்பட்ட வீட்டு விநியோகம் பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டு வாடகை அதிகரித்தால் குறைந்த வருமானம் ஈட்டுவோரினால் அதற்கு ஈடு கொடுக்க முடியாது எனவும் அதனால் சமூக அரசியல் பதற்ற நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
Source:- Tamilinfo