சுவிட்சர்லாந்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சுவிற்சர்லாந்து எத்தனையோ வசதி படைத்த நாடாக கருதப்பட்டாலும் வாகன ஓட்டுனர்களுக்காக கடுமையான சட்டதிட்டங்கள் மற்றும் செலவீனங்கள் ஓட்டுனர்களை எப்போதும் எரிச்சலடையவே வைக்கிறது.
ஓட்டுனர் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கடுமையான சட்ட நடிவடிக்கைகள் மற்றும் தண்டப்பணம் அறவிடுதல் என சுவிற்சர்லாந்து சட்டதிட்டங்கள் இங்கு இருப்பவர்களுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல.
ஆனால் இதையும் தாண்டி ஓட்டுனர்களுக்கு இருக்கும் இன்னுமொரு சிக்கலான விடயம் விபத்துக்கள் ஏற்படும் போது அதனை கையாளுவதுதான்.
தங்களது வாகனம் விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் அதற்கான திருத்த செலவுகள் அளவுக்கு அதிகமாகவும், காப்புறுதி நடவடிக்கைகள் நேரவிரயத்தையும் ஏற்படுத்துவது ஒரு சிக்கலான விடயமாகவே கருதப்படுகிறது.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக சுவிற்சர்லாந்தினை மையப்படுத்தி வெளியாகிறது புத்தம் புதிய அப்ளிகேசன். இன்றைய தொழில்நுட்ப உலகில் கல்வி தொடக்கம் நாம் உண்ணும் உணவு வரை அத்தனையும் ஒரு மொபைல் ஆப் மூலமாகவே சாதிக்க முடிகிறது.
இவ்வாறு உங்கள் வாகன விபத்து தொடர்பான செலவீனங்களை குறைத்து உங்கள் நேரத்தினை மிச்சப்படுத்தவே இந்த புதிய ஆப் (Cartinx) உருவாக்கப்பட்டுள்ளது.
எப்படி..? எவ்வாறு கையாள்வது..?
உங்கள் காருக்கு சேதம் ஏற்பட்டால் குறிப்பிட்ட ஆப்ளிகேசனை திறக்கவும். அங்கு நீங்கள் ஒரு எளிய செயல்முறை மூலம் வழிநடத்தப்படுவீர்கள். அதில் நீங்கள் சேதம் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளிடுவீர்கள். விபத்து நடந்த இடம் சேதத்தின் வகை மற்றும் பிற விவரங்கள் போன்ற தகவல்கள் இதில் அடங்கும்.
மேலும் Cartinx ஆப்ளிகேசன் மூலம் நேரடியாக உங்கள் விபத்து தொடர்பான புகைப்படங்களைப் பதிவேற்றுவதற்கான வசதியும் உள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உங்களால் பதிவு செய்யப்பட்டவுடன் Cartinx ஆப்ஸ் மீதமுள்ளவற்றை தானே கவனித்துக்கொள்கிறது.
எவ்வாறு செயற்படுகிறது..??
Cartinx ஆப்ளிகேசன் நிறுவனம் சுவிற்சர்லாந்தில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இயங்கும் வாகன பழுதுபார்க்கும் நிறுவனங்களுடன் (Garage) தொடர்பை பேணுகிறது. எனவே உங்களால் உள்ளீடு செய்யப்பட்ட அனைத்து விபரங்களும் உங்கள் விபத்து நடந்த பகுதியில் உள்ள பழுது பார்க்கும் நிறுவனங்களுக்கு விரைவாக சென்றடைகிறது.
இந்த நிறுவனங்கள் உங்கள் விபத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு அவர்களால் மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் பழுதுபார்க்கும் நேரங்களை விவரிக்கும். மேலும் அவர்களின் தனிப்பட்ட வேண்டுகோள் மற்றும் ஆலோசனைகளை உங்களுக்கு அனுப்பும்.
உதாரணமாக நீங்களே செலுத்த வேண்டிய தொகை ( Selbstbehalt), என்பவற்றையும் தெளிவாக குறிப்பிட்டு அனுப்பும். இதில் இருக்கும் பெரிய நன்மை என்னவென்றால் நீங்கள் சாதாரணமாக உங்களின் வாகனவிபத்துக்கு காப்புறுதி நிறுவனங்களுக்கு நீங்கள் கையால் செலுத்த வேண்டிய (Selbstbehalt) ஒரு கட்டாயத்தொகை இருக்கும். அது ஒவ்வொருவரது வாகன காப்புறுதி நிறுவனங்களையும் அவர்களின் காப்புறுதி படிமுறமைகளையும் பொறுத்து வேறுபடலாம்.
இங்கு நேரடியாக நீங்கள் வாகனம் திருத்தும் நிறுவனங்களுடன் தொடர்பை பேணுவதால் காப்புறுதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாரிய தொகையை விட குறைவான சலுகைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இடைத்தரகர்கள் இல்லாமல் உங்கள் வாகனம் சம்மந்தப்பட்ட செலவீனங்களை நேரடியாக நீங்களே கட்டுப்படுத்த முடியும். மேலும் காப்புறுதி நிறுவனங்களுடன் தொடர்பை பேணி அதனை விபரித்து நியமனம் பெற்று காலத்தையும் நேரத்தையும் வீண் விரயம் செய்வது இந்த Cartinx அள்ளிகேசன் மூலம் தடுக்கப்படுகிறது.
ஒக்டோபர் மாதத்தினை உங்கள் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஏனெனில் அன்று முதல் Cartinx ஆப்ஸ் அதிகாரப்பூர்வமாக உங்கள் கைகளில் கிடைக்கும் மேலும் உங்கள் காரின் சேதத்தை முடிந்தவரை எளிதாகவும் சாதகமாகவும் சரிசெய்ய உதவும்.
சுவிட்சர்லாந்தில் இனிமேல் விபத்தில் சிக்கி வாகனத்தை வீதியில் நிறுத்தி வைத்துக்கொண்டு யாருக்காவும் நேரத்தையும் காலத்தையும் நீங்கள் வீணடிக்க வேண்டிய தேவையும் அவசியம் இருக்காது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை ஓட்டுனர்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின் தமிழில் இதற்கான விளக்கத்தினையும் நீங்கள் தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்களுக்கு இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கிறது.