சுவிட்சர்லாந்தின் வடக்கு ஆல்ப்ஸ் மலைத் தொடர் பகுதிகளில் புத்தாண்டு தினத்தன்று வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜூரா கான்டனின் டெலிமோன்ட் நகரில் இவ்வாறு கூடுதல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

டெலிமோன்டில் 20.9 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக வடக்கு ஆல்பஸ் மலைத் தொடர்களில் கடந்த 1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி 19.4 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
வெப்பத்துடன் கூடிய காற்றினால் இவ்வாறு டெலிமோன்ட் பகுதியில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது என சுவிட்சர்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக நாட்டின் பல பகுதிகளில் குளிர்கால வானிலையிலிருந்து மாறுபட்டு வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.