சுவிட்சர்லாந்தில் மீண்டும் குளிருடனான காலநிலை நிலவும் என அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் சுவிட்சர்லாந்தில் ஓரளவு வெப்பநிலை காணப்பட்டது எனினும் மீண்டும் குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் வெப்பநிலை குறைவாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் ஏழு முதல் 10 பாகை செல்சியஸ் அளவிலும், நாளை இரண்டு முதல் ஐந்து பாகை செல்சியஸ் அளவிலும் வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓரளவு பலத்த காற்று வீச கூடும் எனவும் மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வரையில் வேகத்துடன் சில பிராந்தியங்களில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
Source:- tamilinfo