Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

சுவிட்சர்லாந்தில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. சளிக்காய்ச்சல் பருவகாலத்தின் போது மருந்து மாத்திரைகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

எனினும், நூற்றுக் கணக்கான மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் உண்டு என மருந்தகங்கள் தெரிவித்துள்ளன.

இருமல் மருந்து, நாசித் தூவாரத்தில் இடும் மருந்துகள், தொண்டை வலிக்கான மருந்து, அமொக்ஸிலின் போன்ற அன்டிபயோடிக் வைக்கள், பொன்ஸ்டன் போன்ற வலி நிவாரணிகள் மற்றும் சிறுவர்களுக்கான திரவ வடிவிலான ஐபுருபன் போன்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில்,மருந்துப் பொருட்கள்,SwissTamilNews,TamilSwiss, SwissTamil,Lankasri,IbcTamil

சுவிட்சர்லாந்தில் போதியளவு மருந்துப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

30 ஆண்டுகளாக மருந்தக அனுபவம் உடைய தாம் இவ்வாறான ஓர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியதில்லை என பேசல் மருந்தாளர் ஒன்றியத்தின் தலைவர் Lydia Isler-Christ தெரிவித்துள்ளார்.

கோவிட் காரணமாக ஏற்பட்ட விநியோகச் சங்கிலி தாமதம் மற்றும் பொதியிடலுக்கான சில மூலப் பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிளினால் இவ்வாறு மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

 

Source:- tamilswiss

Advertisements

Related posts

சுவிஸ் மக்கள் அதிகம் எதற்காக கவலைபடுகின்றனர் தெரியுமா?

admin

சுவிட்சர்லாந்தில் மீன் உணவொன்றை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

admin

நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் நீதிமன்றம் செய்த அதிரடி நடவடிக்கை..!!

admin