முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்களை முரட்டுத்தனமாக தாக்கிய காவலர்கள் இடைநீக்கம்

சுவிட்சர்லாந்தில்

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் மையங்களில் பணி செய்த பாதுகாவலர்கள் பலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கடந்த சில மாதங்களாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் மையங்களில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டவண்ணம் இருந்தன.

சுவிட்சர்லாந்தில்

ஆகவே, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்த அரசு, முன்னாள் பெடரல் நீதிபதியான Niklaus Oberholzer தலைமையில் விசாரணை ஒன்றைத் துவக்கியது.

உடனடி நடவடிக்கையில் இறங்கிய நீதிபதி Niklaus, விசாரணை மேற்கொண்டு, பேசல், Sankt Gallen மற்றும் Neuchatelஇல் அமைந்துள்ள பல காவல் மையங்களில் பணியாற்றிய காவலர்கள் பலரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

#switzerland #Asylum seeker

Related posts