Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் நாளை முதல் விலக்கிகொள்ளப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் எப்போது என்னென்ன கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட உள்ளன என்பது குறித்து, இன்று சுவிஸ் அதிகாரிகள் அறிவிக்க இருக்கிறார்கள்.

பிப்ரவரி 2 அன்று, வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்யும் உத்தரவையும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டையும் சுவிஸ் அரசு விலக்கிக்கொண்டுள்ள நிலையில், மற்ற கட்டுப்பாடுகளையும் சீக்கிரம் அரசு விலக்கிக்கொள்ளக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

என்னென்ன கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படலாம்?

இன்று, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு திட்டங்களில் ஒன்றை பெடரல் கவுன்சில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் திட்டத்தின்படி, பிப்ரவரி 17 அன்று, அதாவது நாளை, உணவகங்கள் மதுபான விடுதிகள் முதலான கட்டிடங்களுக்குள் நுழைய கொரோனா சான்றிதழ் தேவை என்பது முதலான, கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படலாம்.

273783191 241171581564532 4644500736758347831 n

அதுபோல, வெளியிடங்களில் கூடுவதற்கும் இனி கட்டுப்பாடுகள் இருக்காது. மேலும், பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி வாங்கவேண்டியிருக்காது.

ஆனாலும், ஒருவருக்கு கொரோனா தொற்று உருவாகும் நிலையில், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகளும், பெரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, சுயசுத்தம் மற்றும் பாதுகாப்பு திட்டங்களும் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

தற்போதைய கொரோனா அலை உச்சத்தைத் தாண்டி, தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களும் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இந்த கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்படலாம் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

அரசு எதிர்பார்ப்பது போலவே, கொரோனா உச்சம் தொட்டுள்ளது போலவே தோன்றுகிறது. காரணம், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியளவுக்கு குறைந்துள்ளது. பிப்ரவரி துவக்கத்தில் நாளொன்றிற்கு 40,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், தற்போது, அதுவும் நேற்றைய நிலவரப்படி, புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை சுமார் 20,000 ஆக குறைந்துள்ளது.

ஆனால், இந்த நிலை நீடிக்குமா என்பது யாருக்கும் தெரியாது.

இரண்டாவது திட்டத்தின்படி, நாளை, அதாவது, பிப்ரவரி 17 முதல், உணவகங்கள் மதுபான விடுதிகள் முதலான கட்டிடங்களுக்குள் நுழைய கொரோனா சான்றிதழ் தேவை என்னும் விதி விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அமர்ந்தபடிதான் உணவு மற்றும் பானங்கள் அருந்தவேண்டும் என்ற கட்டுப்பாடு கட்டாயம். 2G விதி, அதாவது தடுப்பூசி பெற்றவர்கள் அல்லது கொரோனாவிலிருந்து சமீபத்தில் விடுபட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்னும் விதி, இரவு விடுதிகள், நீச்சல் குளங்கள் மற்றும் உள்ளரங்கு விளையாட்டுத் திடல்களில் தொடர்ந்து பின்பற்றப்படும்.

அத்துடன், தனியார் சந்திப்புகளுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் கிடையாது, பெருமளவில் வெளியிடங்களில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறத்தேவையில்லை.

மாஸ்க் அணிதல் கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும், ஒருவருக்கு கொரோனா தொற்று உருவாகும் நிலையில், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதியும், சில இடங்களுக்கு 2G விதியும் தொடரும். எதிர்காலத்தில் தொற்று பரவல் நிலைமை மேம்படும்போது இந்த விதிகளும் விலக்கிக்கொள்ளப்படலாம்.

இவை இரண்டில் எந்த திட்டத்தை பெடரல் கவுன்சில் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது?

தற்போதைய கொரோனா சூழலைப் பார்க்கும்போது, அது சற்று மேம்பட்டுள்ளதால், அதாவது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் உயிர்ழப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால், முதல் திட்டத்தையே பெடரல் கவுன்சில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Related posts

சுவிஸ் வங்கியில் முடக்கப்பட்ட ரஷ்யாவுக்குச் சொந்தமான 8 பில்லியன் டொலர்கள்

admin

சுவிஸ் சாரதிகளுக்கு அரசு எச்சரிக்கை.!! “சத்தம் போட்டால் சோலி முடிஞ்சு”

admin

சுவிஸ் வாழ் வெளிநாட்டவர்களுக்குத்தான் அதிக வேலையில்லா திண்டாட்டம்!

admin

Leave a Comment