தமிழ் நடிகை சமந்தா ரூத் பிரபு சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகை சமந்தாவும் நாகசைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபரில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து சமந்தா ரிஷிகேஷில் தன்னுடைய விடுமுறையை கழித்தார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது தன்னுடைய தோழி ஷில்பா ரெட்டியுடன் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்.
அங்கு சுவிட்சர்லாந்தில் அவர் பனிச்சறுக்கு உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் பனிச்சறுக்கு செய்யும் வீடியோ ஆகியவற்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை சமந்தா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் கதாநாயகியை மையமாகக் கொண்ட ‘யசோதா’ என்னும் பான் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
View this post on Instagram