Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் குளிருக்கு பதிலாக வெப்பமான காலநிலை – அதிர்ச்சியில் மக்கள்.!!

சுவிட்சர்லாந்தில் குளிருக்கு பதிலாக வெப்பமான காலநிலை – அதிர்ச்சியில் மக்கள்.!! நீண்ட காலமாக பருவநிலை ஆர்வலர்கள் பருவநிலை மாற்றம் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை கவனித்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்குமா என்று தெரியாது. அப்படி ஒரு அசாதாரண நிலை சுவிட்சர்லாந்து உட்பட்ட சில நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

இனி வெறும் திரைப்படங்களில் மட்டும்தான் பனியைப் பார்க்கமுடியுமா?

சுவிட்சர்லாந்து என்றாலே, பனியில் பனிச்சறுக்கு விளையாடும் காட்சிகளைத்தான் சினிமாக்களில் அதிகம் பார்க்கமுடியும். ஆனால், அந்த நிலை இந்த ஆண்டு மாறியுள்ளது.

ஆம், இந்த ஆண்டு போதுமான அளவில் பனிப்பொழிவு இல்லாததால், சுற்றுலாப்பயணிகளுக்கும் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகளுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,SwissTamilNews
சுவிட்சர்லாந்தில் குளிருக்கு பதிலாக வெப்பமான காலநிலை – அதிர்ச்சியில் மக்கள்.!!

உயரமான மலைச்சிகரங்கள் கூட பனி இல்லாமல் வெறும் பாறைகளாக காட்சியளிக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.

@amin1a7 #switzerland #foryou #viral #fürdich #crew #nature #popular #fyp #interlaken #pourtoi #fypbern #skiing #jungfraujoch ♬ Oh no, oh no, oh no, no no – Hip Hop


பூமித்தாயின் கோபமா?

நீண்ட காலமாக பருவநிலை ஆர்வலர்கள் பருவநிலை மாற்றம் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் கூட்டங்களில் அதைக் குறித்து பேசுவதோடு சரி. பருவநிலை ஆர்வலர்கள் அலட்சியத்துடன் நடத்தப்படுகிறார்கள். சில நேரங்களில் தண்டிக்கவும் படுகிறார்கள்.

திடீரென குளிரடிக்கிறது, அடுத்த வாரமே வெப்பம் அதிகரிக்கிறது. பல நாடுகளில் இந்த நிலை காணப்படுகிறது. இந்தச் சூழல்தான் பனிக்கு எதிரி என்கிறார்கள். பனிப் பொழிகிறது, அடுத்து வரும் வெப்பநிலை உயர்வால், உருவான பனி உருகிப்போகிறது. அப்புறம், பனிச்சறுக்கு விளையாட பனிக்கு எங்கே போவது?

@skynews ❄️ #Ski slopes in the #Alps are facing a #snow shortage as warm #January #weather breaks records across #Europe. At least seven countries saw their warmest January weather on record on #NewYearsDay. #NewYear #skislopes #skiresort ♬ original sound – Sky News

பருவநிலை ஆர்வலர்களின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததன் விளைவு, தற்போது, நாடுகளின் வருவாயை பாதிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது. ஆம், சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விலையாட பனியே இல்லை என்றால், சுற்றுலாப்பயணிகள் ஏன் அங்கு வரப்போகிறார்கள்!

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Source

Advertisements

Related posts

இலங்கை தம்பதியரை சுவிட்சர்லாந்துக்கு நாடுகடத்த உத்தரவு

admin

சுவிட்சர்லாந்தில் புர்கா அணிந்தால் 1000 பிராங்குகள் அபராதம்.!

admin

சுவிஸ் விமான சேவை இலங்கைக்கான விமானப் பயணங்களை ஆரம்பித்துள்ளது

admin