சுவிட்சர்லாந்தில் காலாவாதியாகப்போகும் 130 மில்லியன் சுவிஸ் பிராங்குகள்.!!
சுவிட்சர்லாந்தில் காலாவாதியாகப்போகும் 130 மில்லியன் சுவிஸ் பிராங்குகள்.!! சுவிட்சர்லாந்தில் சுமார் 140 மில்லியன் முகக் கவசங்கள் காலாவதியாகும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் சுமார் 140 மில்லியன் முகக் கவசங்கள் காலாவதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட்19 பெருந்தொற்று காலத்தில் இந்த முகக் கவசங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 180 மில்லியன் முகக் கவசங்கள் இராணுவ மருந்தக களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி 130 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் 140 மில்லியன் முகக் கவசங்கள் இந்த ஆண்டில் காலாவதியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தை விலையில் இந்த முகக் கவசங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.