முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ்?

21 609f8ef80e81d

இந்திய வகை கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் காரணமாக, பல நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துவிட்டன.

ஏற்கனவே இந்தியா சுவிட்சர்லாந்தின் மூன்றாவது நாடுகள் பட்டியலில் இருந்தது. அதன் குடிமக்களுக்கு சுவிட்சர்லாந்தில் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. சுவிஸ் குடிமக்கள் மற்றும் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Thulasi-Thirumana-Sevai

இந்நிலையில், ஏப்ரல் 26 அன்று சுவிட்சர்லாந்து இந்தியாவை தனது அதிக அபாய நாடுகள் பட்டியலில் சேர்த்தது. அதாவது, இந்தியாவிலிருந்து வருபவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்ததும் தங்களை 7 முதல் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அது மட்டுமின்றி, அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணி நேரத்துக்கு முன் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோயியல் துறை மற்றும் வைரஸ் துறை தலைவரான Laurent Kaiser கூறும்போது, சுவிட்சர்லாந்தில் காணப்படும் இந்திய வகை கொரோனா வைரஸ் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றுதான் என்று கூறியுள்ள அதே நேரத்தில், அந்த வைரஸ் குறித்து போதுமான அளவு தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

21 609f8ef80e81d

அது அப்படி ஒன்றும் பயங்கரமாக பரவக்கூடியது என எதிர்பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திய கொரோனா வைரஸில் இரண்டு திடீர் மாற்றங்கள் உள்ளன என்று கூறியுள்ள அவர், அவற்றில் ஒன்று பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ்களிலும் காணப்படுவதாகவும், அது அந்த வைரஸ் சாதாரண வைரஸ் அல்ல என எண்ணத்தூண்டுகிறது என்றும், ஆனால் அதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Related posts