சுவிஸில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கம் ஏன் தெரியுமா..?? சுவிட்சர்லாந்தில் எரிபொருட்களின் விலைகளில் நகரத்திற்கு நகரம் ஏற்ற இறக்கம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விலை ஏற்ற இறக்கமானது குறிப்பிடத்தக்களவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் ஒவ்வொரு இடத்திலும் எரி பொருளின் விலை ஆனது வித்தியாசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. Touring Club Suisse (TCS) என்னும் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ள அமைவிடம் காரணமாக விலை ஏற்ற இறக்கம் மாறுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நகரங்கள், கிராமங்கள், எல்லைப் பகுதிகள் என எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு ஏற்ற வகையில் விலையில் மாற்றம் பதிவாகின்றது.
பெற்றோலின் விலை 48 சதத்தினாலும் டீசலின் விலை 47 சதத்தினாலும் அதிகபட்சமாக வித்தியாசப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.