Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா.?

சுவிட்சர்லாந்தில் என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா.? சுவிஸ் பெடரல் புள்ளியியல் அலுவலகம் திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சுவிட்சர்லாந்தில் முக்கியமான சில பணிகள் செய்வோர் சராசரியாக பெறும் ஊதியம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பணி செய்வோர் பெறும் சராசரி ஊதியம்

சுவிட்சர்லாந்தை பொருத்தவரை, நிதித்துறையில் பணி செய்வோரின் சராசரி ஊதியம்தான் உயர்ந்ததாக உள்ளது. சுவிற்சர்லாந்தின் எந்தெந்த துறையில் பணியாற்றுகிறவர்கள் எவளவு ஊதியம் சராசரியாக பெறுகிறார்கள் என்ற விபரங்களை பார்க்கலாம் வாங்க..

  • நிதித்துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 10,211 சுவிஸ் ஃப்ராங்குகள்
  • மருந்தகத்துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 10,040 சுவிஸ் ஃப்ராங்குகள்
  • தகவல் தொழில்நுட்பத்துறையினர் 9,200 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறுகிறார்கள்.
சுவிட்சர்லாந்தில், சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் நாட்டின்
சுவிட்சர்லாந்தில் என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா.?

குறைவான ஊதியம்

குறைவான ஊதியம் பெறுவோர் என்று பார்த்தால், ..

  • விருந்தோம்பல் துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 4,479 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறுகிறார்கள்.
  • சில்லறை வர்த்தகத்துறையிலுள்ளவர்களும் மாதம் ஒன்றிற்கு 4,997 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறுகிறார்கள்.
  • மிகக்குறைந்த வருவாய் என்று பார்த்தால், சுவிட்சர்லாந்தில் முடிதிருத்துவோர், அழகியல் கலைஞர்கள் போன்றவர்கள் மாதம் ஒன்றிற்கு 4,211 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறுகிறார்கள்.

நடுத்தர ஊதியம் என்று பார்த்தால்,

  • சுகாதாரத்துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 6,821 சுவிஸ் ஃப்ராங்குகளும்,
  • உற்பத்தித்துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 7,141 சுவிஸ் ஃப்ராங்குகளும் ஊதியம் பெறுகிறார்கள்.

இன்னொரு முக்கிய விடயம், தாங்கள் பணிபுரியும் துறை சார் கல்வி கற்றவர்கள், மற்றவர்களை விட நல்ல ஊதியம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Advertisements

Related posts

தாஜ்மகாலுக்கு சென்ற சுவிஸ் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

admin

சுவிஸ் சூரிச் இல் ஏற்பட்ட தீ விபத்து – இன்று அதிகாலையில் சம்பவம்

admin

சுவிஸ் – பிரான்ஸிற்கும் இடையிலான ரயில் பயணங்களுக்கு பாதிப்பா..?

admin