முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள்

changes into effect in switzerland from today

சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள்

அரசு அறிவித்தபடி இன்றும், இன்று முதலும் சுவிட்சர்லாந்தில் பல விடயங்கள் நடைபெற உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நெகிழ்த்தப்பட உள்ளன. அதன்படி, உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு உள்ளே மட்டுமின்றி, இனி வெளியே மற்றும் மாடிகளிலும் மக்கள் அமர அனுமதியளிக்கப்படுகிறது.

திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்கங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா விமான நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள 3,000 முதல் 4,000 பேர் அமரக்கூடிய வசதியுள்ள பெரிய அரங்கம் ஒன்றில் தடுப்பூசி போடும் திட்டம் இன்று நடைபெறுகிறது.

பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சுவிஸில் பத்திரமாக மீட்பு

இன்று முதல் பிரான்சின் Région Bretagne மற்றும் Région Nouvelle-Aquitaine ஆகிய பகுதிகள், ஜேர்மனியின் Land Sachsen பகுதி மற்றும் இத்தாலியின் Regione Puglia ஆகிய பகுதிகள் சுவிட்சர்லாந்தின் அதிக அபாய பட்டியலில் இணைக்கப்படுகின்றன.

சுவிட்சர்லாந்தில்-
சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள்

அந்த பகுதிகளிலிருந்து வருவோர் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும். பெடரல் கவுன்சிலில் மேலும் இரண்டு உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு, உறுப்பினர்கள் எண்ணிக்கை ஏழிலிருந்து ஒன்பது ஆக உயர்த்தப்படுகிறது.

இதுபோக, ஜூலை மாதம் முதல் 1,000 பேர் வரை பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் முதல், 5,000 பேர் வரை பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sourcehttps://tamilwin.com/

Related posts