Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் இணைய பயன்பாட்டில் மூழ்கும் வயது முதிர்ந்தவர்கள்.!!

சுவிட்சர்லாந்தில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டு கால பகுதியில் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் எந்த விடயம் தெரிய வந்துள்ளது.

அடிக்கடி இணையத்தை பயன்படுத்தும் சுவிட்சர்லாந்து பிரஜைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில், இணைய பயன்பாட்டில்,வயது முதிர்ந்தவர்கள்
சுவிட்சர்லாந்தில் 14 வயதிற்கும் மேற்பட்ட 93 வீதமான மக்கள் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

65 வயதிலும் கூடியவர்கள் 78 வீதமானவர்கள் இணையத்தை பயன்படுத்துவதாகவும் இணைய செயலிகளை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக ஸ்மார்ட் போன்களின் ஊடாக அதிகளவானவர்கள் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்களை விடவும் ஆண்கள் அதிக அளவில் இணையத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisements

Related posts

சுவிஸில் சிறுவர்களை அறைந்தால் கடுமையான தண்டணை.!!

admin

நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் நீதிமன்றம் செய்த அதிரடி நடவடிக்கை..!!

admin

சூரிச்சில் குடியிருப்புக்களுக்கான வாடகைத் தொகை அதிகரிப்பு

admin