Image default
sankt gallenSwiss Local News

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து – மூன்று இளைஞர்கள் பலி

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சென் கேலனின், Niederuzwil ல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சென் கேலன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில்,கோர விபத்து ,இளைஞர்கள் பலி
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து – மூன்று இளைஞர்கள் பலி

இந்த சம்பவத்தில் 19 மற்றும் 22 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவத்தில் மேலும் இரண்டு யுவதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் வாகனத்தில் பயணித்தவர்களா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Advertisements

Related posts

சுவிட்சர்லாந்தில் ஒரு விநோத மோசடி: பணத்தை இழந்த தொழிலதிபர்

admin

பாதசாரி மீது E-Bike இல் சென்றவர் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

admin

A18 Reinach BL – சுரங்கப்பாதை சுவரில் மோதி BMW கார் விபத்து

admin

Leave a Comment