Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் அதிவேக கேமராக்கள் தொடர்பில் வெளியான தகவல்.!!

சுவிட்சர்லாந்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதற்கு மிகக் கடுமையான தண்டனைகள் உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஓட்டுநரின் உரிமம் அகற்றுதல் மற்றும் சிறைக் காலம் தவிர, அபராதம் ஓட்டுநர்களின் வருமானத்தில் ஒரு சதவீதமாக உயரும்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் 100 கிமீ/ம பயணிக்க வேண்டிய வீதியில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக ஒருவருக்கு CHF 299,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு 2012 ஆம் ஆண்டில் வயா சிகுரா எனப்படும் புதிய சட்டங்களை அரசாங்கம் இயற்றிய பின்னர் 2013 ஆம் ஆண்டில் சுவிஸ் சாலை விதிகள் கடுமையாக்கப்பட்டன.

இந்த புதிய விதிமுறைகள் வேகக் கேமராக்கள் இருக்கும் இடத்தினை காட்டிக்கொடுப்பது அல்லது எச்சரிப்பது சட்டவிரோத செயலாக கருதப்பட்டது. இருப்பினும் புதிய சட்டம் ஒன்றின் மூலம் கன்டோனல் அதிகாரிகளால் கேமராக்களை சுட்டிக்காட்டுவது தவறில்லை எனவும் பல மண்டலங்கள் சேர்ந்து முடிவு செய்துள்ளதாக RTS தெரிவித்துள்ளது.

அதிவேக கேமராக்கள்

செயின்ட் கேலன், டிசினோ மற்றும் சமீபகாலமாக Basel-Landschaft மாகாணங்கள் அனைத்தும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் தங்கள் வேகக் கேமராக்கள் இருக்கும் இடத்தை விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளன. சோலோதூர்ன் மாகாணத்தில் இந்த மூன்று மண்டலங்களையும் பின்பற்றுவதற்கான திட்டம் அரசாங்கத்தின் முன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மண்டலங்களில் உள்ள சாலைப் பயனாளிகள்இ வேகக் கேமராக்கள் மற்றும் வேகத்தைக் கண்டறியும் அதிகாரிகளின் இருப்பிடம் பற்றிய தகவல்களைப் பகிரங்கமாகப் பகிரக் கூடாது. மேலும் கமிஞ்சைகள் காட்டுவதன் மூலம் வேகக்கமராக்கள் இருக்கும் இடத்தை தெரிவிப்பது போன்ற செயல்கள் தண்டனைக்குரியது என சொல்லப்படுகிறது.

அதிவேக கேமராக்கள்
அதிவேக கேமராக்கள்

2020 ஆம் ஆண்டில், பெர்ன் மாகாணத்தில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் இதுபோன்ற தகவல்களைப் பகிரங்கமாகப் பகிர்ந்ததற்காக சுமார் 200 பேர் நீதியின் முன் நிறுத்தப்பட்டனர் என்று RTS தெரிவித்துள்ளது. ஸ்பீட் கேமராக்களின் இருப்பிடத்தை விளம்பரப்படுத்துவதற்கு ஆதரவான வாதம் அது விபத்துகளைக் குறைக்க உதவுவதாக பலர் தெரிவிக்கிறார்கள். வாகன ஓட்டிகளுக்கு ஸ்பீட் கேமரா இருப்பது தெரிந்தால், அபராதம் விதிக்கப்படாமல் இருக்க வேகத்தை குறைக்கின்றனர் எனவும் அந்த தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

செயின்ட் கேலனில் சில இடங்களில் இந்த நடமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அறிமுகப்படுத்தியதில் இருந்து விபத்துகளின் எண்ணிக்கை 15% குறைந்துள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் அனைத்து மண்டலங்களும் இவ்வாறான ஒரு நடமுறையை கொண்டுவருதில் உடன்படவில்லை. பெர்னில் இதுபோன்ற இரண்டு முன்மொழிவுகள் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டன, பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. அதற்குப் பதிலாக ஜெனீவா செய்யும் வேகப் பரிசோதனையின் அளவை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

Advertisements

Related posts

சுவிஸில் வாகன தரிப்பு கட்டணங்கள் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை

admin

குடிபோதையில் கார் ஓட்டிய 32 வயது இளைஞன் விபத்து.! Dietschwil SG இல் சம்பவம்

admin

சுவிட்சர்லாந்தில் கோவிட் பலியெடுத்த உயிர்கள் எத்தனை தெரியுமா.?

admin

Leave a Comment