சுவிட்சர்லாந்தில் சட்டவிரோத குடியேற்றம் மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 52000 சட்டவிரோத குடியேறிகள் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது கடந்த 2021ம் ஆண்டை விடவும் 33000 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்திரியா மற்றம் இத்தாலி எல்லைப் பகுதி வழியாகவே அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறிகள் சுவிட்சர்லாந்தை வந்தடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் மற்றும் மொரக்கோ ஆகிய நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்கும் அநேகமான சட்டவிரோத குடியேறிகள் பிரான்ஸ் அல்லது பிரித்தானியா செல்லும் நோக்கில் சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளம் ஆப்கானிஸ்தான் பிரஜைகளே அதிகளவில் சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியேறுதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டில் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட 422 பேரை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=2Mugb4R-WWs