முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் அதிகரித்த மக்கள் தொகை : வெளியான காரணம்

சுவிட்சர்லாந்தில் அதிகரித்த மக்கள் தொகை : வெளியான காரணம்.!

சுவிஸில் சுமார் 12% இறப்பு எண்ணிக்கை பதிவான நிலையிலும், மக்கள் தொகையில் உயர்வு பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

2020 முடிய சுவிட்சர்லாந்தின் மொத்த மக்கள் தொகை 8,667,100 என பதிவாகியுள்ள நிலையில், 2019ம் ஆண்டை விட மக்கள் தொகையில் 61,100 அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 0.7% உயர்வாகும்.

சுவிட்சர்லாந்தில்,அதிகரித்த,மக்கள் தொகை,வெளியான காரணம்
சுவிட்சர்லாந்தில் அதிகரித்த மக்கள் தொகை : வெளியான காரணம்

ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் 8,200 பேர் இறந்துள்ளதுடன், பிறப்பு விகிதமும் சரிவடைந்துள்ளது. இருப்பினும் மக்கள் தொகை அதிகரிக்க காரணம் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே காரணம் என கூறப்படுகிறது.

பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் – சுவிற்சர்லாந்துக்கு ஏற்பட்ட நிலமை.!

இன்னும் துல்லியமாக, சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு காணப்பட்டதும் முதன்மை காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறியவர்களை விட 56,000 பேர் சுவிட்சர்லாந்திற்கு குடியேறியுள்ளனர், ஆனால் 2019 உடன் ஒப்பிடும்போது குடியேறியவர்கள் மற்றும் வெளியேறியவர்கள் இரண்டும் முறையே 3.9% மற்றும் 15.6% குறைந்துள்ளது.

மேலும் கொரோனாவால் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. ஆண்களின் இறப்பு பெண்களை விட முறையே 14.6% மற்றும் 9.9% ஆக அதிகரித்துள்ளது.

Related posts