சுவிட்சர்லாந்தில் அதிகமாக அகதி அந்தஸ்து கோரியவர்கள் எந்த நாட்டவர் தெரியுமா.? சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையில் ஏதிலி கோரிக்கையாளர் விண்ணப்பம் செய்தவர்கள் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மொத்த ஏதிலிக் கோரிக்கையாளர்களில் சுமார் 35 வீதமானவர்கள் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான்களின் கெடுபிடிகளை தாங்கிக் கொள்ள முடியாது இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான ஆப்கான் பிரஜைகள் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஏதிலி அந்தஸ்து கோரியுள்ளனர்.
கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதத்தில் ஏதிலி கோரிக்கையாளர் விண்ணப்பம் செய்த 3568 ஏதிலிக் கோரிக்கையாளர்களில் 1266 பேர் ஆப்கான் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து குடிப்பெயர்விற்கான ராஜாங்கச் செயலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான இளம் ஆப்கானிஸ்தான் ஆண்களே சுவிட்சர்லாந்தில் ஏதிலி அந்தஸ் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.)