முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்சுக்குள் யாரெல்லாம் உட் செல்லமுடியும் : புதிய தகவல்.!!

சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்சுக்குள் யாரெல்லாம் உட் செல்லமுடியும் : புதிய தகவல்.!!

பிரான்சில் கொரோனா பரவலைத் தடுப்கும் வகையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், எல்லை தாண்டி பிரான்சில் பணிக்கு செல்வோருக்கு விதிவிலக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே சில குழப்பங்கள் நிலவுகின்றன.

பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் – சுவிற்சர்லாந்துக்கு ஏற்பட்ட நிலமை.!

அதை தெளிவுபடுத்தும் வகையில் விளக்கமளித்துள்ள ஜெனீவாவிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தின் அதிகாரி ஒருவர், சுவிஸ் பிரான்ஸ் எல்லையிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவுக்குள் வசிக்கும் சுவிஸ் குடிமக்கள் பிரான்சுக்குள் நுழையும்போது கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என்றும், அதே நேரத்தில், சுவிட்சர்லாந்திலிருந்து பிரன்சுக்கு பயணிப்போரின் முகவரிச் சான்று மற்றும் எதற்காக பயணம் செய்கிறோம் என்பதைக் காட்டும் ஆவணம் ஆகியவற்றை அவர்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்திலிருந்து,பிரான்சுக்குள்,புதிய தகவல்
சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்சுக்குள் யாரெல்லாம் உட் செல்லமுடியும் : புதிய தகவல்.!!

நீங்கள் எல்லையிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவுக்குள் வசித்தால், நீங்கள் பிரான்சுக்குள் ஷாப்பிங் கூட செல்லலாம், ஆனால், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்கும் கடைகள் பிரான்சில் மூடப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்வது நல்லது.

தேவைப்பட்டால் பிரான்சிலுள்ள மருத்துவரிடமோ, கால்நடை மருத்துவரிடமோ நீங்கள் செல்லலாம்.

இதுபோக, பிரான்சில் வீடு வைத்திருக்கும் சுவிஸ் குடிமகனாக நீங்கள் இருந்தால்கூட, அந்த வீடு எல்லையிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவுக்குள் இல்லையென்றால், நீங்கள் அங்கு செல்லமுடியாது.

Related posts