முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் அதிகரித்த பிறப்பு விகிதம்

Screenshot swiss

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்தில் 2019 ம் ஆண்டை விட 2020ல் பிறப்பு எண்ணிக்கை சரிவடைந்துள்ள நிலையில், கொரோனா காலகட்டம் என்பதால் 2021ம் ஆண்டும் எதிர்பார்ப்புகளைவிட மிக குறைந்த பிறப்பு எண்ணிக்கையே பதிவாகும் என கருதப்படுகிறது.

ஆனால் பெர்ன் மண்டலத்தில் மட்டும் பிறப்பு விகிதம் 2021ல் அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020 முதல் மூன்று மாதங்களில் 447 என பதிவாகியிருந்த பிறப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 522 என பதிவாகியுள்ளதாக பெர்ன் பல்கலைக்கழக மருத்துவமனை சுட்டிக்காட்டியுள்ளது.

Screenshot swiss
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் அதிகரித்த பிறப்பு விகிதம்

இதே நிலையை மண்டலத்தின் வேறு முக்கிய மருத்துவமனைகளும் மகப்பேறு இல்லங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதுமட்டுமின்றி, கர்ப்ப சோதனைகள் எண்ணிக்கையும் பெர்ன் மண்டலத்தில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கர்ப்ப சோதனை கருவிகளின் விற்பனை இந்த ஆண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் விலகாத நிலையில் மகப்பேறு என்பது கண்டிப்பாக மறுப்பரிசீலனை செய்யவேண்டியது கட்டாயம் என பிரதான மகப்பேறு இல்லங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts