சுவிட்சர்லாந்தின் இந்த ஆண்டுக்கான விலங்கினமாக நீல நிற இறக்கைகளைக் கொண்ட வெட்டுக்கிளி அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்திற்கே உரித்தான 15 வகையான வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன.

இரண்டு சென்றிமீற்றர் நீளமான இந்த பூச்சியானது இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் மாறக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பூச்சி வகைகளின் இயற்கையான இருப்பிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் பூச்சி இனங்கள் பல அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அழிவடைந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு தோறும் சுவிட்சர்லாந்தில் ஓர் விலங்கினம் பெயரிடப்படுவது வழமையாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டில் வெட்டுக்கிளி பெயரிடப்பட்டுள்ளது.