SwissTamil24.Com
Swiss headline News

சுவிட்சர்லாந்தின் அரசியல் – அறிய வேண்டிய பத்து விடயங்கள்.!!

சுவிட்சர்லாந்தின் அரசியல் – அறிய வேண்டிய பத்து விடயங்கள்.!! சுவிட்சர்லாந்தின் பிரபல்யமான நேரடி ஜனநாயகம் பற்றி குழப்பமாக உள்ளதா? சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்? மேற்படி கேள்விகளுக்கு கீழே உள்ள விளக்கங்கள்; பதில் தருகின்றன.

1.அது ஒரு கூட்டிணைப்பாட்சி

சுவிட்சர்லாந்து ஒரு உடன்பாட்டின் கீழ் இணைந்த 26 வெவ்வேறான மாகாணங்களை உள்ளடக்கிய பொது அரசு ஆகும். யுரி, ஸ்கெவைஸ், மற்றும் அன்டர்வோல்டன் ஆகிய மாகாணங்கள் 1291 ஆகஸ்ட் முதலாம் திகதி லேக் லஸர்ன் இல் உள்ள ரட்லி மெடொவில் வைத்து ஒன்றிணைவதற்கு விருப்பம் தெரிவித்ததையடுத்து இந்த பொது அரசாங்கம் உருவானது. இந்த தினம் ஒவ்வொரு வருடமும் சுவிட்சர்லாந்தின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த கூட்டிணைப்பாட்சி பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த நிலையில் 1815 இல் தற்போதைய எல்லைகள் அமைந்தன. கூட்டிணைந்த அரசியலமைப்பு 1848 இல் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கூட்டிணைந்த நாடாளுமன்றம் அமைந்ததுடன் மத்திய அரசாங்கத்துக்கு ஓரளவு அதிகாரமும் கிடைத்தது.

சுவிட்சர்லாந்தின் அரசியல், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss

2. மூன்று மட்டத்தில் அரசாங்கங்கள் உள்ளன.

கூட்டிணைந்த முறைமையில் அதிகாரமானது கூட்டிணைந்த அரசாங்கம், மாகாண அரசாங்கங்கள் மற்றும் நாட்டின் 2000 க்கு மேற்பட்ட நகராட்சி ஆகியவற்றுக்கிடையில் அதிகாரம் பகிரப்படுகிறது.

கூட்டிணைந்த அரசாங்கமானது கொள்கை, பாதுகாப்பு, தேசிய பாதைகள், மற்றும் வெளி நாட்டு உறவுகளை கையாளுகிறது. மாகாண அரசாங்கங்;கள் சட்டம், நீதி, அரசியலமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சார அலுவல்களை கவனிக்கின்றன.

நகராட்சிகள் பெரும்பாலும் சமூக சபைகளினால் நடத்தப்படுகின்றன. இவை உள்ளாட்சி, சமூக நலன் பேணல் மற்றும் பாடசாலைகளை கவனிக்கின்றன.

3.கூட்டிணைந்த நாடாளுமன்றத்தில் இரண்டு சபைகள் உள்ளன.

கூட்டிணைப்பு சட்டங்கள் நாடாளுமன்றத்தினால் இயற்றப்படுகின்றன. இதில் இரு சபைகள் உள்ளன. இந்த சபைகளுக்கான உறுப்பினர்கள் நான்கு வருடங்களுக்கொருமுறை மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர்.

தேசிய பேரவை என்ற கீழ் சபையானது ஒட்டு மொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில் 200 எம்.பி.க்கள் இடம் பெறுகின்றனர். செனெட் என்று அழைக்கப்படும் மேல் சபை மாகாண அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில் 46 செனெட்டர்கள் உள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் அரசியல், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss

இரு சபைகளுக்கும் ஒரே அதிகாரங்களே உள்ளன. இவை இரண்டும் இணைந்து கூட்டிணைந்த சபையாக கருதப்படுகின்றன. பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின் அதியுயர் அதிகார சபை இதுவாகும்.

4.அரசாங்கமானது மக்களால் அன்றி நாடாளுமன்றத்தினாலேயே தெரிவு செய்யப்படுகின்றன.

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க நிறைவேற்று சபை கூட்டிணைந்த பேரவை என்று அழைக்கப்படுகிறது. அதில் உள்ள ஏழு மன்றத் தலைவர்கள் அரசாங்கத்தின் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு தலைமை தாங்குகின்றனர். இவர்கள் நான்கு ஆண்டு கால தவணைக்காக தெரிவு செய்யப்படுகின்றனர்.

மற்றைய நாடுகளைப் போலன்றி கூட்டிணைந்த பேரவையின் உறுப்பினர்கள் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை. அவர்கள் கூட்டிணைந்த சபையின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றனர். அதே நேரம் கூட்டிணைந்த சபையின் தலைமையதிகாரி, சட்ட மா அதிபர், உயர் நீதி மன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகளையும் நாடாளுமன்றமே தெரிவு செய்கிறது.

5.சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை.

அரசாங்கத்தை நாடாளுமன்றம் தெரிவு செய்வதால், நாட்டின் ஜனாதிபதியையும் நாடாளுமன்றமே தெரிவு செய்கிறது. அவர் ஒரு வருட காலமே சேவையாற்றுவார். அதன் பின்னர் அவருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் சம அதிகாரம் உள்ளவர்களிடையே அவர் முதல் நபராக கருதப்படுவார். கூட்டிணைந்த பேரவையின் கூட்டங்களுக்கு ஜனாதிபதி தலைமை தாங்குவார். அத்துடன் தேவையான போது அவர் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்.

சுவிஸ் வங்கி, சுவிட்சர்லாந்தின் அரசியல், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss

6. கூட்டிணைந்த அரச மட்டத்தில் சுவிஸ் நாட்டவர்கள் மட்டுமே வாக்களிக்கலாம்.

18 வயதுக்கு மேற்பட்ட சுவிஸ் பிரஜைகள் எவரும் நாடாளுமன்ற மற்றும் சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியும். வாக்களிக்கும் உரிமை ஆண்களுக்கு 1848 இல் கிடைத்தபோதும் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமை 1971 லேயே கிடைத்தது. எனினும் ஒரு மாகாண சபையில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமை 1991 லேயே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் பிரஜா உரிமை இல்லாத வெளி நாட்டவர்கள் நாட்டில் எவ்வளவு காலம் இருந்தாலும் கூட்டிணைப்பாட்சி மட்டத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். என்னும் ஒரு சில மாகாண அரசாங்கங்கள் மற்றும் நகராட்சிகள் உள்ளுர் மட்டத்தில் மட்டும் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கின்றன. வெளிநாட்டில் உள்ள சுவிஸ் பிரஜைகள் சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களிக்கலாம்.

7. வாக்களிக்கும் முறைமைகள் மாறுகின்றன.

விகிதாசார பிரதிநிதித்துவத்தின் பிரகாரமே தேசிய சபைக்கு எம.பி.க்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். எனினும் செனெட் என்ற மேல் சபைக்கான தேர்தல்களில் ஒரு சில மாகாண அரசாங்கங்களில் அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றவராக கருதப்படுகிறார்.

தேர்தல்கள் பெரும்பாலும் இரகசிய வாக்களிப்பு மூலமே இடம் பெறுகின்றன. எனி;னும் அப்பென்சல் இன்னர்ஹோடனில் மட்டும் மக்கள் செனெட் என்ற மேல் சபைக்கான தமது பிரதிநிதியை தமது மக்கள் சபையின் பாரம்பரிய ஒன்று கூடலில் கைகளை உயர்த்தி தெரிவு செய்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில், சுவிட்சர்லாந்தில் சுற்றுலா, சுவிற்சர்லாந்தில், சுவிட்சர்லாந்து, சுவிட்சர்லாந்தின், சுவிட்சர்லாந்து தமிழ், ஸ்விட்சர்லாந்தில், சுவிட்சர்லாந்து அரசியலமைப்பு, சுவிட்சர்லாந்து அரசியல், பாலியல்சட்டங்கள், சட்டங்கள் மூலம், சட்ட ரீதியாக பெண்களின்,

சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் சுவிஸ் மக்கள் கட்சி, சமூக ஜனநாயக கட்சி, லிபரல் அடிப்படைவாத கட்சி, மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி ஆகும்.

சுவிஸ் நாடாளுமன்றத்தில் தற்போது எந்தவொரு தனிக் கட்சியும் பெரும்பான்மையுடன் இல்லை. எனி;;னும் 2015 நாடாளுமன்ற தேர்தலில் வலது சாரி சுவிஸ் மக்கள் கட்சி கீழ் சபையின் 200 ஆசனங்களில் 65 இல் வெற்றி பெற்று 11 உறுப்பினர்களை அதிகமாகப் பெற்று தேசிய பேரவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற பெருமையைப் பெறுகிறது.

8.சட்டமியற்றல் என்பது ஒரு நீண்ட நடைமுறை.

நாடாளுமன்றமானது மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் ஒரு வருடத்துக்கு நான்கு முறை மூன்று வார கால தொடருக்காக கூடுகிறது. நகல் சட்டங்கள் ஒவ்வொரு சபையிலும் மூன்று முறை விவாதிக்கப்படுகின்றன. இறுதி இணக்கப்பாட்டை அடுத்து அவை நிறைவேற்றப்படுகின்றன. எவ்வாறெனினும் நேரடி ஜனநாயகத்தின் மூலம் அவை நிறைவேறும் சாத்தியம் உண்டு.

சுவிற்சர்லாந்து, ஜனநாயகமான நாடா, Swisstamilinforamtion, swissinfo, swisstamil, swisstamil24, lankasri

9.நேரடி ஜனநாயகம்.

வருடத்தில் நான்கு முறை இடம் பெறும் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் பிரபல்யமான சர்வஜன வாக்கெடுப்பில் நாடு எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதை சுவிஸ் மக்கள் தங்கள் விருப்பங்கள் மூலம் எடுத்துக் கூறுகின்றனர்.

1874 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறைமையின் கீழ் அரசியமைப்பில் எந்தவொரு திருத்தத்தையும் இந்த சர்வஜன வாக்குரிமை மூலம் மக்களிடம் முன்வைக்கலாம். அதனை நிறைவேற்ற மாகாண சபைகள் மற்றும் மக்கள் ஆகிய இரு தரப்பினரினதும் பெரும்பான்மை வாக்குகள் தேவை.

10. பொது மக்களே ஒரு சர்வஜன வாக்கெடுப்பை ஆரம்பிக்கலாம்.

புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தை எதிர்த்து எந்தவொரு சுவிஸ் பிரஜையும் தனது விருப்பத்தின் பேரில் கட்டாயமற்றதான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளலாம். அதற்கு 100 நாட்களுக்குள் 50 ஆயிரம் பேரின் கையொப்பங்கள் சேகரிக்கப்படவேண்டும். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டம் நிறைவேற்றப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.

சுவிற்சர்லாந்தின் சனத்தொகை, சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்
அதிகரிக்கப்போகும் சுவிற்சர்லாந்தின் சனத்தொகை.! வெளியான அறிவிப்பு

1891 முதல் இவ்வாறான ஜனரஞ்சக சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்கள் அரசியலமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்துமாறு கேட்கலாம். இது குறைந்த பட்சம் 7 பேர் கொண்ட குழுவின் மூலம் முன்னெடுக்கப்படலாம். அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு எடுத்துச் செல்ல 18 மாதங்களுக்குள் ஒரு லட்சம் பேரின் கையொப்பங்கள் பெறப்பட வேண்டும். அது நிறைவேற மக்கள் மற்றும் செனெட் சபை ஆகிய இரு தரப்பினரினதும் பெரும்பான்மை வாக்குகள் தேவை.

2009 இல் பள்ளி வாயில் தூபிகளை தடை செய்யவும் 2014 இல் பாரிய குடிவரவுகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்புகள் சர்ச்சைக்குரிய வகையில் வெற்றி பெற்றதை இங்கு குறிப்பிடலாம். எனினும் 1891 க்கும் 2016 க்கும் இடையில் இடம் பெற்ற 209 சர்வஜன வாக்கெடுப்புகளில் 22 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து மக்களின் சம்பாத்தியம்

2016 இல் சுவிட்சர்லாந்து மக்களின் சராசரி சம்பளம், வரி விதிப்புக்கு முன்னர் 6502 பிராங்க் ஆகும். புதிய புள்ளி விபரங்களின்படி தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளிலேயே அதிக வருமானம் கிடைத்தது.

அனைத்து தொழிலாளர்களிலும் அரைவாசிப் பேர் 2016 இன் வரி விதிப்புக்கு முன்னரான இந்த வருமானத்துக்கு மேல் சம்பாதித்தனர். மற்றைய அரைவாசிப் பேரின் சம்பாத்தியம் இதற்கு குறைவாகவே இருந்தது.

2014 இல் சுவிட்சர்லாந்தில் உள்ள முழு நேர தொழிலாளி ஒருவரின் சம்பாத்தியம் 5.1 சத வீதத்தால் அதிகரித்திருந்ததாக சுவிஸ் அரசாங்கத்தின் புள்ளி விபர அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்புகள் கூறுகின்றன.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை சூரிச் தான் அதிக செலவு மிக்க நகரமாகும். சுவிஸ் சம்பாத்திய கட்டமைப்பு 2016 ஆய்வின்படி உயர்மட்டத்தில் இருந்த 10 சத வீத உழைப்பாளர்களின் சராசரி வருமானம் 2008 இல் இருந்து 2016 வரை(வரி விதிப்புக்கு முன்னர் மாதாந்தம் 11 ஆயிரத்து 406 பிராங்குகள்) 6.3 சத வீத அதிகரிப்பை காட்டி நிற்கிறது.

அதே நேரம் கீழ் மட்டத்தில் இருந்த 10 சத வீத உழைப்பாளர்களின் வருமானம் 9.9 சத வீதத்தால் அதிகரித்திருந்ததாக தெரிய வருகிறது.

சராசரி சம்பளத்தின் 70 முதல் 150 சத வீதம் வரை உழைக்கும் நடுத்தர வர்க்க உழைப்பாளிகளிடையே இந்த அதிகரிப்பு 2008 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 6.9 என்ற சராசரியாக இருந்தது. 2008 முதல் 2016 வரை சம்பள சமமின்மையானது தொடர்ந்து ஸ்திர நிலையிலேயே இருந்து வந்தது.

2008 இல் உயர் மட்டத்தில் இருந்த 10 சத வீத உழைப்பாளர்களின் சம்பளம் கீழ் மட்ட 10 சத வீத உழைப்பாளர்களின் சம்பளத்தை விட 2.7 சத வீதம் அதிகமாக இருந்தது. 2016 இல் இந்த இடைவெளி 2.6 சத வீதமாகக் குறைந்தது.

2016 இல் அதிக சராசரி சம்பளமானது மருந்து தயாரிப்பு கைத்தொழிலிலேயே கிடைத்தது. (ஒரு மாதத்துக்கு 9835 பிராங்குகள்) 2010 முதல் இது 10 சத வீத அதிகரிப்பை காட்டுகிறது. அதனையடுத்து நிதி மற்றும் வங்கித் துறை (9742 பிராங்குகள்)இ முகாமைத்துவ ஆலோசனை (9616 பிராங்குகள்)ஆகியவை உள்ளன.

சுவிஸ் ஃப்ராங்குகள்,சுவிஸ் ஃப்ராங்குகள்,சுவிஸ் மக்கள்,தில்லாலங்கடி,10 பில்லியன்,சுவிஸ்,SwisstamilNews
Swiss Tamil News

இந்த அளவுகோளின் மறு முனையில் அலுவலர்கள் மற்றும் மனித வள சேவைகள் (மாதாந்தம் 4076 பிராங்குகள்) விருந்தோம்பல் (4332 பிராங்குகள்) மற்றும் சில்லறை வர்த்தக துறை (4798 பிராங்குகள்) ஆகியவை இடம் பெறுகின்றன.

சுவிட்சர்லாந்தில் சம்பள வேறுபாட்டை நோக்கும் போது 2016 இல் பெண்களின் சம்பளம் ஆண்களின் சம்பளத்தை விட 12 சத வீதம் குறைவாக இருந்தது. 2014 இல் அது 12.5 சத வீதம் குறைவாக இருந்தது. பெண்கள் தங்கள் வேலையிடங்களில் செய்யும் வேறு வகை கடமைகள், ஆண்களிடம் இருந்து வேறுபட்ட கடமைப் பொறுப்புகள் மற்றும் ஒவ்வொறு தொழிலுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு ஆகியவை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுவிஸ் அரசாங்கத்தின் புள்ளி விபர அலுவலகம் சுட்டிக் காட்டுகிறது.

அதே நேரம் 2016 இல் உயர் மட்ட பொறுப்புடன் கூடிய ஒரு வேளையில் உள்ள ஒரு பெண்ணின் சராசரி சம்பளம் மாதாந்தம் 8861 பிராங்குகளாக இருக்கையில் அதே மட்ட பொறுப்பில் உள்ள ஒரு ஆணின் சராசரி சம்பளம் 10,878 பிராங்குகளாகஇ 18.5 சத வீத வேறு பாட்டுடன் இருந்ததையும் புள்ளி விபர அலுவலகம் சுட்டிக் காட்டுகிறது.

அதே நேரம் பொறுப்பு குறைந்த வேலைகளில் ஆண் மற்றும் பெண்களுக்கிடையிலான சம்பள வேறுபாடு 10.5 என்ற குறைந்த அளவிலேயே இருந்தது. அதிக சம்பளம் தரும் தொழில்களில் ஆண் மற்றும் பெண்களுக்கிடையிலான சம்பள வேறுபாடு குறிப்பிடத்தக்கதாக இருந்ததை காண முடிகிறது.

காப்புறுதி துறையைப் பொறுத்தவரை இந்த வேறுபாடு 31.3 சத வீதமாகவும் வங்கி மற்றும் நிதித் துறையில் 30.1 சத வீதமாகவும் முகாமைத்துவ ஆலோசனைத் துறையில் 26.8 சத வீதமாகவும் இருக்கிறது.

பிராந்திய ரீதியில் சூரிச் பிராந்தியத்தில் இது மாதாந்தம் 6869 பிராங்குகளாகவும் வட மேற்கு சுவிட்சர்லாந்தில் மாதாந்தம் 6700 பிராங்குகளாகவும் லேக ஜெனிவா பிராந்தியத்தில் இது மாதாந்தம் 6591 பிராங்குகளாகவும் உள்ளது.

இந்த பட்டியலின் அடி மட்டத்தில் உள்ள டிசினோவில் முழு நேர வேலைக்கான சம்பளம் 5563 பிராங்குகளாக உள்ளது.

வெளிநாட்டு வேலையாட்களைப் பொறுத்தவரை (மாதாந்தம் 5893 பிராங்குகள்) சுவிஸ் வேலையாட்களை விட(மாதாந்தம் 6808 பிராங்குகள்) குறைந்த சம்பளமே கிடைக்கிறது. எனினும் அதிக பட்ச பொறுப்புடன் கூடிய வேலைகளில் உள்ள வெளிநாட்டு வேலையாட்கள் அதே நிலையில் உள்ள சுவிஸ் வேலையாட்களை விட அதிக சம்பளம் பெறுகின்றனர்.

எல்லை தாண்டிய வேலையாட்களுக்கு இந்த சம்பளம் 10,750 பிராங்குகளாக உள்ள நிலையில் சுவிஸ் வேலையாட்களுக்கு அது 10,136 ஆக உள்ளது. சுவிஸ் குடியிருப்பு பெர்மிட் வைத்திருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வரி விதிப்புக்கு முன்னரான சம்பளமாக மாதாந்தம் 12,746 பிராங்குகளை பெறுகின்றனர். சுவிட்சர்லாந்தில் சராசரி வருமானம் அதிகமாக இருந்த போதிலும் அங்கு வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமாக உள்ளது.

பொருளாதார தகவல் அலகின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு ஆய்வுகளில் சூரிச்சும் ஜெனீவாவும் அடிக்கடி முதல் பத்து இடங்களில் இடம் பிடித்து விடுகின்றன. உணவு மற்றும் பான வகைகள், உடைகள், வாடகை, பயணச் செலவு, பயன்பாட்டு செலவுகள், மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய 160 அம்சங்களுடன் கூடிய 400 விடயங்கள் இந்த ஆய்வில் ஒப்பிடப்படுகின்றன.

2017 முதல் இடம் பெற்ற ஐரோப்பிய வாழ்க்கைச் செலவு ஆய்வுகளில் சுவிட்சர்லாந்தில் பாவனைப் பொருட்களின் விலைகள் ஐரோப்பிய யூனியனின் சராசரி விலைகளை விட 61 சத வீதம் அதிகமாக இருந்தன. உணவு மற்றும் மது சாரமற்ற பான வகைளின் விலைகள் ஐரோப்பிய யூனியனின் சராசரி விலைகளை விட 72 சத வீதம் அதிகமாக இருந்தன. ஐரோப்பாவின் சராசரி விலைகளை விட சுவிட்சர்லாந்தின் சராசரி விலைகள் அதிகமாக இருந்த போதிலும் அதனை அனைவரும் இலகுவாக எதிர் கொள்ள முடியாதுள்ளதாக சிறந்த வாழ்க்கை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

2016 இல் சுவிஸ் மக்களில் 21 சத வீதத்தினருக்கு மேல், ஒரு மாதத்தில் 2500 பிராங்குகள் என்ற எதிர்பாராத செலவினை தாங்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை என்று புள்ளி விபர அலுவலகம் கூறுகிறது. வறுமை என்பது தொடர்ந்தும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

அது நாட்டின் பிரச்சினையாகவும் உள்ளது. 2016 இல் 6 லட்சத்து 15 ஆயிரம் சுவிஸ் மக்கள் வறுமையில் இருந்ததாக புள்ளி விபர அலுவலகம் அலுவலகம் அண்மையில் தரவுகளை வெளியிட்டது.

அந்த வருடத்தில் மொத்தமாக 7.5 சத வீத சுவிஸ் மக்கள் வறுமை கோட்டின் கீழ் இருந்தனர். 2015 இல் அது 7 சத வீதமாகவும் 2014 இல் 6.7 சத வீதமாகவும் இருந்ததாக தெரிய வருகிறது. வறுமை என்பது தனியாக வசிக்கும் ஒருவருக்கு மாதாந்தம் 2247 பிராங்குகளுக்கு குறைந்த வருமானம் என்றும் இரண்டு பெரியவர்கள் மற்றும் 14 வயதுக்குக் குறைந்த இரண்டு சிறுவர்களையும் கொண்ட குடும்பத்துக்கு 3981 பிராங்குகளுக்கு குறைந்த வருமானம் என்றும் புள்ளி விபர அலுவலகம் கணித்துள்ளது.

– InfoTamil.ch

all image 1600x603 1

Related posts

சுவிஸில் சுட்டு கொல்லப்படும் ஓநாய்கள் : ஏன் தெரியுமா.?

admin

சுவிசில் அறிமுகமாகும் புதிய பாலியல் குற்றவியல் சட்டம்

admin

சுவிட்சர்லாந்தில் நீர் மின் திட்டங்களினால் ஆபத்து – எச்சரிக்கை தகவல்.!!

admin

Ante Milicic, Josep Gombau in line for Western Sydney Wanderers’ job

admin

உக்ரைன் சமாதான மாநாட்டை விரைவில் நடத்தவேண்டும் : சுவிட்சர்லாந்து ஜனாதிபதி

admin

சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறையில் சரிவு – காரணம் வெளியாகியது.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More