கடந்த 2022-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பாரிய அளவில் போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக ஏழு தசம் ஐந்து மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான போலி நாணயத்தால்கள் புழக்கத்தில் இருந்ததாகவும் அவற்றை கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்கு அதிக தொகை என தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் மத்திய புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திட்டமிட்ட அடிப்படையில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்தில் போலி நாணயத்தாள் புழக்கம் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
Via :- tamilinfo