சுவிட்சர்லாந்தில் பனிமலை ஏறும் விளையாட்டுகளில் ஈடுபட்ட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மைய சில தினங்களில் இந்த ஆறு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சுவிட்சர்லாந்தின் தென்பகுதி மலைகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சூரிச் கான்டனில் 37 வயதான ஆண் ஒருவரும் 33 வயதான பெண் ஒருவரும் லேகிஹான் மலையை ஏறி கடக்க முயற்சித்த போது உயிரிழந்துள்ளனர்.
மலையின் உச்சியை அடைந்ததன் பின்னர் இருவரும் சுமார் 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து உயிரிழந்தனர்.
மேலும் வலாயிஸ் கான்டனைச் சேர்ந்த சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை ஸ்டாக்கோ மடையில் இந்த சம்பவம் பதிவாகியது என தெரிவிக்கப்படுகிறது .
வலாயிஸ் கான்டனின் மான்ட் பிளாக் பகுதியில் 26 வயதான பிரஞ்சு பிரஜை ஒருவரும், 36 வயதான டச் பிரஜை ஒருவரும் மலை ஏறிக்கொண்டிருந்த போது கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.