Image default
Swiss informations

சாக்லேட் சாப்பிடுங்கப்பா.. : சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்ய ஆய்வு

சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்துவதால் உடல் நலத்திற்கு நன்மை ஏற்படாது என சுவிஸ் ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதய பிரச்சினை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
சூரிச்சை மையமாகக் கொண்ட அறிவியலாளர்கள், atrial fibrillation என்னும் இதயப் பிரச்சினை கொண்ட 3,000 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.

chocolate binge 720x460 1

Atrial fibrillation என்பது சீரற்ற இதயத்துடிப்பாகும். அதாவது, சிலருக்கு, திடீரென இதயம் வேகமாகத் துடிக்கும், திடீரென மிக மெதுவாக துடிக்கும்.

இப்படி சீராக துடிக்காமல் வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இதயம் துடிப்பதே மருத்துவத் துறையில் atrial fibrillation என அழைக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்தின் மிகச்சிறந்த Dating Applications : Best Dating Apps in Switzerland

இந்த பிரச்சினை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியப்படுத்தும் விளைவுகளை வெளிக்கொணர்ந்தன. ஆம், மிதமான அளவில் சாக்லேட் சாப்பிடுவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், ஏன், மரண அபாயத்தையும் கூட குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சாக்லேட்

வாரத்திற்கு இரண்டு முதல் ஆறு சாக்லேட் பார்கள் சாப்பிடுவது மிக நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக, சாக்லேட் சாப்பிடுவதை மொத்தமாக நிறுத்துவது, உடல் நலத்திற்கு நன்மையைத்தான் ஏற்படுத்தும் என்று பொத்தாம் பொதுவாக கூறிவிடமுடியாது!

Advertisements

Related posts

சுவிற்சர்லாந்து அனைத்து விடயங்களிலும் ஒரு ஜனநாயகமான நாடா.?

admin

சுவிற்சர்லாந்தில் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இணையத்தளம்.!!

admin

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைக்கலாமா.? சுவாரசிய தகவல்.!!

admin