முக்கிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படும் பெண்கள் : சுவிசில் வெளியான அதிர்ச்சி தகவல்

swiss tamil news, corona vaccine in swiss, swiss news in tamil

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் இன்னும் கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் சுவிற்சர்லாந்து நாட்டிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது சர்ச்சையான விடயம் ஒன்று வெளியாகியுள்ளது. சுவிஸ்மெடிக் வெளியிட்டுள்ள அந்த விபரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் இதுவரை 597 பேர் பக்க விளைவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலானோர் பெண்கள் என தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி,சுவிசில்,தடுப்பூசி

சுவிட்சர்லாந்தில் மார்ச் 8 ம் திகதி வரை கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் பக்க விளைவுகள் குறித்த தகவல்களை சுவிஸ்மெடிக் வெளியிட்டது.

இதில் மொத்தம் 597 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதத்தினர் பெண்கள் என தெரிய வந்துள்ளது.

ஆனால் ஆபத்தான நிலையில் எவரும் இல்லை என்றே சுவிஸ்மெடிக் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுமார் 24 பேர்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 18 பேருக்கு மூச்சுத்திணறலும், 14 பேர்களுக்கு மறுபடியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, 21 பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் பல்வேறு இடைவெளிகளில் மரணமடைந்துள்ளனர்.

சுவிஸில் இதுவரை பைசர் நிறுவன தடுப்பூசியும் மாடர்னா நிறுவன தடுப்பூசியும் மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.

பிரித்தானிய நிறுவனத்தின் AstraZeneca தடுப்பூசிக்கு சுவிஸ்மெடிக் நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

Related posts