முக்கிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள்: சுவிஸ் வெளியிட்ட புதிய பட்டியல்

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள்: சுவிஸ் வெளியிட்ட புதிய பட்டியல்

கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நாடுகளின் புதிய பட்டியலை சுவிஸ் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலில் இடம்பெற்ற நாடுகளில் இருந்து விமானம் மூலம் சுவிட்சர்லாந்துக்கு வரும் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மட்டுமின்றி 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்பட வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் 7 நாட்களுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியான பின்னர் விடுவிக்கப்படுவார்கள்.

சுவிஸின் நிலைமை மிகவும் மோசமடையும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சுவிஸ் வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் தற்போது கனடாவையும் உட்படுத்தியுள்ளனர். இந்த புதிய பட்டியலானது ஏப்ரல் 19 முதல் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நாடுகள்

மொத்தம் 45 நாடுகள் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அல்பேனியா, இஸ்ரேல், ஜமைக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்சின் கோர்சிகா பகுதி மற்றும் இத்தாலியின் அப்ருஸ்ஸோ பகுதி, பசிலிக்காடா பகுதி, மோலிஸ் பகுதி, அம்ப்ரியா பகுதி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Source

Related posts