கொசோவோ- செர்பியாவிற்கு இடையில் சுவிட்சர்லாந்தில் இரகசிய பேச்சுவார்த்தை
பால்கன் பிராந்திய நாடுகளான கொசோவோவிற்கும், சேர்பியாவிற்கும் இடையில் சுவிட்சர்லாந்தில் இரகசிய பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் பதற்ற நிலையை குறைக்கும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகன இலக்கத்தகடு தொடர்பிலான முரண்பாடு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் அண்மையில் பதற்ற நிலை ஏற்பட்டது.
முரண்பாடுகளை களையும் நோக்கில் இரு தரப்பிற்கும் இடையில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சு பல இரகசிய பேச்சுவார்த்தை சுற்றுகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொசோவோவில் சுவிஸ் அமைதி காக்கும் படையினர் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/4GRKUmQ8BiQ?list=PLus9Myqxny-31JLsKfc7TpDE3NPKFzbSd