கன்டோன் ஊரியில் பற்றி எரிந்த வீடு – ஒருவர் மாயம்.!! ஸ்விட்ச்லாந்தின் Uri கன்டோனில் நேற்று திங்கட்கிழமை 21 ஆம் தேதி காலை 6 மணிக்கு பின்னர் ஒரு கட்டிடம் தீப்பற்றி எரிந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீடு முழுவதும் எரிந்ததைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் மும்முரமாக செயற்பட்டனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை தொடங்கி இருக்கிறார்கள். இந்த விபத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் இந்த விபத்தின் காரணமாக ஒருவரை காணவில்லை எனவும் சொத்து சேதத்தின் அளவை இன்னும் கணக்கிட முடியாமல் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Uri மாகாணத்தின் உடைய மீட்பு சேவை மற்றும் தீயணைப்பு படைகள், SBB இயந்திரம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகம் ஊறிக் கண்ட்ரோல் போலீசார் இணைந்து இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Source: Kantonspolizei Uri
Bilder: Kantonspolizei Uri