முக்கிய செய்திகள்

கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு.!!

Transparent-security-key-swiss

சுவிட்சர்லாந்தில்,  ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு – கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிஸ் நிறுவனம் ஒன்று, கண்ணுக்குத்தெரியாத பூட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. பிளாஸ்டிக் பேப்பர் போல காணப்படும் இந்த எலக்ட்ரானிக் பூட்டை கதவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஒட்டிக்கொள்ளலாம்.

திருடர்கள் வந்தால், பூட்டு எங்கே இருக்கிறது என்று விடிந்தாலும் அவர்களால் தேடிக்கண்டுபிடிக்கமுடியாது. EMPA என்ற சுவிஸ் ஆய்வு மையம் இந்த பூட்டைக் கண்டுபிடித்துள்ளது.

கண்ணுக்கு தெரியாத பூட்டு

கண்ணுக்குத் தெரியாத இந்த பூட்டை கதவிலோ, பணம், நகைகள் வைக்கும் லாக்கரிலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டிவைக்கலாம். பாதுகாப்பின் அடுத்த மட்டம் என்று பாராட்டும் அளவுக்கு அந்த பூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு

வெளியாகியுள்ள வீடியோவில், அந்த ஆச்சரிய பூட்டு எப்படி செயல்படுகிறது என்பதைக் காணலாம்.

 

Related posts