Image default
Swiss headline News

ஒரு நிமிடம் தாமதத்திற்கு 90 பிராங்க் அபராதம்! சுவிஸ் ரயில்வேவுக்கு பதிலடி கொடுத்த முதியவர்

சுவிட்சர்லாந்தில் ஒரு நிமிடம் தாமதமாக ரயில் டிக்கெட் வாங்கியதற்காக ஓய்வூதியதாரருக்கு 90 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், ஜீன்-ராபர்ட் எனும் 72 வயது முதியவர் ஒன்றரை நிமிடம் தாமதமாக தனது ரயில் டிக்கெட்டை வாங்கியதற்காக, அவருக்கு சுவிஸ் ஃபெடரல் ரயில்வேயால் (SBB) அபராதம் விதிக்கப்பட்டது.

நடந்தது இதுதான்: ஜனவரி 11-ம் தேதி மாலை 3.37 மணிக்கு, ஜீன்-ராபர்ட் லென்ஸ்பர்க்கில் இருந்து ஆர்காவ் மாகாணத்தில் உள்ள ஹன்சென்ச்வில்லுக்கு ரயிலில் சென்றார்.

அவர் ரயிலில் ஏறும் முன் ஓன்லைனில் தனது டிக்கெட்டை வாங்க விரும்பினார். ஆனால் முகக்கவசம் காரணமாக எனது தொலைபேசி முதலில் என்னை அடையாளம் காணவில்லை, மேலும் பனி காரணமாக அவரது கண்ணாடியில் பனி மூடி இருக்கிறது.

ரயில் புறப்பட்ட ஒன்றரை நிமிடத்திற்குப் பிறகே டிக்கெட்டை வாங்க முடிந்துள்ளது. ஆனால் அதனைப் பயன்படுத்தி ரயிலில் பரிவர்த்தனையை முடித்துள்ளார்.

ஆனால், இது ஒரு முறையான பயணம் அல்ல. அவருடைய டிக்கெட்டைச் சரிபார்த்த போது, அவர் ரயிலில் ஏறுவதற்கு முன்பு கட்டணத்தைச் செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்காக ஜீன்-ராபர்ட்டுக்கு 90 ஃபிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு நிமிடம்,90 பிராங்க்,அபராதம்,சுவிஸ் ரயில்வே

ஜீன்-ராபர்ட் 57 ஆண்டுகளாக சுவிஸ் பெடரல் ரயில்வேயின் (SBB) வாடிக்கையாளராகவும் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர் என்பதால் அவர்மிது விதிக்கப்பட்ட அபராதம் முரண்பாடாக பார்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து செய்தித்தாள் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு, SBB செய்தித் தொடர்பாளர் Frédéric Revaz, இந்த முடிவை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கு இடமில்லை என்றார். “இதுபோன்ற விசுவாசமான வாடிக்கையாளருக்கு அபராதம் விதிக்கப்படுவது எங்களுக்கு ஏமாற்றம்தான், ஆனால் விதிமுறைகள் கண்டிப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

“டிக்கெட் வாங்குவது ரயில் புறப்படுவதற்கு முன் முழுமையாக முடிக்கப்பட வேண்டும்” என்று ரேவாஸ் மேலும் கூறினார்.

“இந்த விஷயத்தில் விதிமுறைகள் தெளிவாக உள்ளன மற்றும் ஒரு நல்ல காரணத்திற்காக. ஆங்காங்கே சோதனைகள் உள்ள ரயில்களில், வாடிக்கையாளர்கள் புறப்படுவதற்கு முன் டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.

ஜீன்-ராபர்ட்டைப் பொறுத்தவரை, அவர் SBB-க்கு 100-ஃபிராங்க் நோட்டை அபராதமாக அனுப்பினார், அதனுடன் ரயில்வே பராமரிப்பு பட்ஜெட்டை மேம்படுத்த, தனது அபராதம் போக மிச்ச பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று நிறுவனத்திற்கு ஒரு கடிதத்துடன் அனுப்பினார்.

ஆனால் கூடவே அந்த கடிதத்தில், என வயதுக்கு நான் ஒரு “கட்டண ஏமாற்றுபவராக” கருதப்படுவது “என்னை மகிழ்விக்கிறது, ஆனால் மிதமாக மட்டுமே” என்று எழுதியுள்ளார்.

 

Source:- Lankasri

Advertisements

Related posts

சுவிற்சர்லாந்தில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை

admin

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கம் ஏன் தெரியுமா..??

admin

சுவிஸ் ரயிலில் கிடைத்த தங்கக்கட்டிகள்: அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு

admin

Leave a Comment