முக்கிய செய்திகள்

எங்களை கைவிட்டனர்… வெளிநாடு வாழ் சுவிஸ் மக்கள் கவலை

21 609 swiss

கொரோனா பரவும் இந்த இக்கட்டான சூழலில் சுவிஸ் நிர்வாகம் தங்களை கைவிட்டு விட்டதாக வெளிநாட்டு வாழ் சுவிஸ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் பரவலாக அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. பலர் காத்திருப்பதை தவிர்க்க, வேறு மண்டலங்களில் சென்று முறைகேடாகவும் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால் சுவிட்சர்லாந்தில் மருத்துவ காப்பீடு இருப்பவர்களுக்கே கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுவதால் தற்போது வெளிநாட்டு வாழ் சுவிஸ் மக்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

தாய்லாந்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் சுவிஸ் தம்பதி, சொந்த நாட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள். அவர்கள் தற்போது சுவிஸ் திரும்பி உள்ளனர்.

ஆனால் அவர்களது வயது காரணமாக கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். சுவிட்சர்லாந்தில் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லை என்பதால் அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

21 609 swiss

இந்த நிலையில் நண்பர் ஒருவரின் குடும்ப மருத்துவரின் உதவியுடன் அந்த தம்பதி தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். சுவிட்சர்லாந்தின் கடும்போக்கு விதிகளாலையே தாங்கள் முறைகேடாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள அந்த தம்பதியின் நெருங்கிய நண்பர் ஒருவர், தடுப்பூசி இல்லாமல் கொரோனாவால் இறக்க நேரிட்டால், அதை பொதுமக்களின் அக்கறையின்மையாக சுவிஸ் நிர்வாகம் கருதும் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டு வாழ் சுவிஸ் மக்களுக்கு, சுவிஸ் சுகாதாரத்துறை தடுப்பூசி அளிக்க மறுத்துவரும் நிலையில், ஜேர்மனியில் மருத்துவ காப்பீடு இல்லாமலையே அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts