உக்கிரேன் மீது ரஷ்ய படையினர் மேற்கொண்ட எறிகணை தாக்குதல்களுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் வெளியிட்டுள்ளது.
உக்கிரனின் கிழக்கு பகுதி நகரான Kostyantynivka நகரில் அமைந்துள்ள சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த எறிகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர். சர்வதேச சட்டங்களின் பிரகாரம் சிவிலியன் மீது தாக்குதல் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது.
உக்கிரன் மீது முன்னெடுத்து வரும் ராணுவ ஆக்கிரமிப்புகளை நிறுத்திக் கொள்ளுமாறு மீண்டும் கோரிக்கையை விடுப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
Source:- tamilinfo