முக்கிய செய்திகள்

இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க | பகுதி-2 | SwissTamil24.Com

Deutsch மொழி கற்கலாம்

இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க | பகுதி-2 | SwissTamil24.Com – சுவிற்சர்லாந்தில் பன்னெடு காலமாக இருக்கின்ற பல தமிழர்கள் இன்னும் Deutsch மொழி தெரியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள். இன்று Deutsch மொழி கற்பது சுவிற்சர்லாந்து நாட்டுக்கு வரும் ஏனைய நாட்டவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாட்டில் குடியிருக்க வேண்டுமாயின் இந்தநாட்டு மொழி கற்கவேண்டும் என்பது அவர்களது சட்டமாக இருக்கிறது. தற்போது சுவிற்சர்லாந்து குடியுரிமைக்காக வருபவர்கள் அரச அணுசரணையுடனே Deutsch மொழியை கற்று வருகிறார்கள்.

சுவிற்சர்லாந்தின் இன்றைய செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

click hereஆனால் ஆரம்ப காலத்தில் சுவிசுக்கு வந்து குடியேறிய எம்மவர்கள் Deutsch மொழி தெரியாமல் இன்னும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு படிக்க ஆசையாகவும் ஆவலாகவும் இருக்கும்.

Deutsch lernen

ஆனால் வெளியில் சென்று படிப்பதற்கு சிலர் கூச்சப்படுவார்கள். மேலும் மிக முக்கிய காரணம் நேரம் இன்மை. இதனால் படிப்பு என்பதை தள்ளிப்போட்டுக் கொண்டே எம்மவர்கள் மொழி வளம் இன்றி இங்கு அடிமை போன்று வாழ்வது கவலைக்குரிய விடயம்.

நாம் வாழும் இந்த நாட்டில் அவர்கள் மொழி கொஞ்சமேனும் தெரிந்திருந்தால் தான் எமது சின்ன சின்ன விடயங்களை கூட நாம் வாதிட்டு பெற்றுக்கொள்ள முடியும் என்பது பலருக்கு தெரியும்.

இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க – பகுதி 01

எனவே அதற்கான ஒரு வழிகாட்டியாகவும் பலருக்கு பயன்படும் என்ற நோக்கிலும் எமது இணையத்தளம் மேற்கொள்ளும் சிறிய முயற்சியே இது. மிகவும் இலகுவான முறையில் Deutsch மொழி, அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள இலகுவாக இருக்கின்ற காணொளிகளை தொகுத்து வழங்குகிறது எமது இணையம்.

இந்த காணொளிகளை நீங்கள் வீட்டில் இருக்கின்ற போது திரும்ப திரும்ப பார்ப்பதன் மூலம் Deutsch மொழியை கற்றுக்கொள்ள முடியும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இக்காணொளியை பகிர்வதன் மூலம் அவர்களும் பயன் அடைய வேண்டுகிறோம். நன்றி.!!!!

Related posts