இலங்கை குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அவசரமற்ற மற்றம் அத்தியாவசியமற்ற இலங்கைப் பயணங்களை தவிர்க்குமாறு சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தமது நாட்டுப் பிரஜைகளிடம் கோரியுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவசர தேவைகளற்றவர்கள் இலங்கைக்கான விஜயங்களை தவிர்ப்பது உசிதமானது என தெரிவித்துள்ளது.
ட்ரான்சிட் அடிப்படையில் இலங்கையில் இறங்கி மீளவும் வேறும் விமானங்களில் பயணத்தை தொடர்வதனைத் தவிர்ந்த இலங்கைக்கான நேரடிப் பயணங்கள அவசியமற்றது என தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தனது இணைய தளத்தில் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் பதற்ற நிலைமைகள் நீடிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
மேலும் உங்கள் பிரதேசங்களிலும் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தமிழில் படிக்க எமது இணையத்தளத்தை தினமும் பார்வையிடுங்கள்.