முக்கிய செய்திகள்

இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய சுவிட்சர்லாந்து

Swiss medical things

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இந்தியாவிற்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

அந்த வகையில் ரஷியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பெல்ஜியம், ருமேனியா, லக்சம்பர், சிங்கப்பூர், போர்ச்சிகல், ஸ்வீடன், நியூசிலாந்து, குவைத் உள்பட பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவி வழங்கியுள்ளன.

Swiss medical things

அந்த வரிசையில், இந்தியாவுக்கு மருத்துவ நிவாரண உதவிகளை சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் வழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ உதவிப்பொருட்கள் இரண்டு விமானங்கள் மூலம் இன்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தன.

இந்த மருத்துவ உபகரணங்கள் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

Related posts